பூண்டுத் துவையல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பூண்டு - 20 பல்
2. காய்ந்த மிளகாய் - 2 எண்ணம்
3. புளி - சிறிது
4. கறிவேப்பிலை - சிறிது
5. கடுகு - 1/4 தேக்கரண்டி
6. உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
7. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
2. இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
3. அரைத்தத் துவையலில் தாளித்தவற்றைச் சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.