பனங்கிழங்குத் துவையல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பனங்கிழங்கு – 5 எண்ணம்
2. காய்ந்த மிளகாய் – 3 எண்ணம்
3. மிளகு – 1/2 தேக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் – 1/2 கப்
5. சின்ன வெங்காயம் – 4 எண்ணம்
6. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. பனங்கிழங்கை வேக வைத்து மேல் தோலை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. சின்ன வெங்காயம், மிளகாயை நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாயைப் போட்டு வதக்கவும்.
4. வதக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அரைக்கவும்.
5. அனைத்தும் ஓரளவு அரைப்பட்டதும், கடைசியாகப் பனங்கிழங்கைத் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.