கத்திரிக்காய் துவையல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் பெரியது - 2 எண்ணம்
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. வெள்ளை எள் - 2 தேக்கரண்டி
4. புளி - ஒரு நெல்லிக்காயளவு
5. பெருங்காயத்தூள் - சிறிதளவு
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
9. நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
10. வெந்தயம் - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
12. கறிவேப்பிலை - சிறிது
13. உப்பு - ருசிக்குத் தேவையான அளவு
செய்முறை:
1. கத்தரிக்காயை நன்கு கழுவித் துடைத்து, அதன் மேல் இலேசாக எண்ணெய்யைத் தடவவும். அதனை அப்படியேத் தோலோடு அடுப்பில் வைத்துச் சுட வேண்டும்.
2. மேல் தோல் நன்கு நிறம் மாறும்வரை வைத்து சுட்டு, காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உரித்தெடுக்கவும்.
3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம் ஆகியவற்றச்த் தனித்தனியாகச் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
4. எள்ளையும் தனியாக இலேசாக வறுத்து இறக்கவும்.
5. நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் எள், வெந்தயம், சுட்ட கத்தரிக்காய், வதக்கிய வெங்காயம், வறுத்த மிளகாய் வற்றல், புளி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
6. நன்றாக அரைத்தப் பின் உளுத்தம் பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து உப்பைச் சேர்க்கவும்.
7. கடுகு, பெருங்காயப் பொடியைச் சேர்த்து எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.