பிரண்டை எள்ளுத் துவையல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. இளம் பிரண்டை (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
2. தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
3. எள் - 1 தேக்கரண்டி
4. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
5. மிளகு - 1/2 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
7. புளி - சிறிதளவு
8. கறிவேப்பிலை - சிறிதளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் எள்ளை வறுத்து எடுத்து வைக்கவும்.
2. பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயைப் போட்டு வறுக்கவும்.
3. பிரண்டையைத் தனியாக எண்ணெய் விட்டு வதக்கவும்.
4. வதக்கிய அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.