மாங்காய் இஞ்சி நெல்லிக்காய்த் துவையல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பெரிய நெல்லிக்காய் – 4 எண்ணம்
2. மாங்காய் - 30 கிராம்
3. இஞ்சி – 25 கிராம்
4. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
5. புளி – சிறிது
6. தேங்காய்த் துருவல் – 1 மேசைக்கரண்டி
7. மல்லித் தழை – சிறிது
8. உப்பு – தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. மாங்காய், இஞ்சியைத் தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
2. நெல்லிக்காயை, கொட்டை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி ஆற வைத்துவிடவும்.
4. ஆறிய பின்பு, அதனைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
குறிப்பு:
1. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
2. இந்தத் துவையலைச் சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சிறிது நெய் விட்டுக் கிளறினால், ‘மாங்காய் இஞ்சி – நெல்லிக்காய் சாதம்’தயாராகிவிடும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.