இஞ்சித் துவையல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. இஞ்சி - 50 கிராம்
2. வர மிளகாய் - 2 எண்ணம்
3. புளி - 20 கிராம்
4. உப்பு - தேவையான அளவு
5. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1.1. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வர மிளகாயைப் போட்டு வறுக்கவும்.
2. இதில் புளி, இஞ்சி போன்றவைகளை சிறு துண்டுகளாக்கிப் போட்டு வதக்கி எடுக்கவும்.
3. வதக்கிய கலவையை அரைத்து எடுக்கவும்.
4. அரைத்த துவையலை தாளிசம் செய்து கொள்ளலாம்.
குறிப்பு:காரம் குறைவாக இருப்பது நல்லது. தக்காளி சேர்த்து அரைத்தாலும் நன்றாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.