பருப்புத் துவையல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
2. கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
3. பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் - 1 மேஜைக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
6. பூண்டு - 2 பற்கள்
7. கறிவேப்பிலை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை போட்டு நன்கு வறுத்துத் தனியே வைக்கவும்.
2. அடுத்து, துவரம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பைத் தனித்தனியாக வறுத்துத் தனியே வைக்கவும்.
3. சூடாக இருக்கும் கடாயில் தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து இலேசாக வறுத்து அனைத்தையும் ஆறவிடவும்.
4. நன்கு ஆறிய பிறகு, அதனுடன் உப்பும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு:
1. புளிச்சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களுக்குத் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.