எள் துவையல்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. கறுப்பு எள் - 1/2 கோப்பை
2. பூண்டு - 2 பற்கள்
3. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
4. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
5. புளி - சிறிது
6. கறிவேப்பிலை - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெறும் வாணலியைச் சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும்.
2. உப்பு தவிர, மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
3. அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு, புளி சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கெட்டியாகத் துவையலாக அரைத்துக் கொள்ளவும்.
4. தேவைப்பட்டால் சிறிது எண்ணெய், கடுகு போட்டுத் தாளித்து கொள்ளலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.