சிறு பருப்புத் துவையல்
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. சிறு பருப்பு - 2 மேசைக் கரண்டி
2. தேங்காய்த் துருவல் - 2 மேசைக் கரண்டி
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. பூண்டு பல் - 1எண்ணம்
5. உப்பு - தேவையான அளவு
6. கடலெண்ணை - 1 சிறிய மேசைக் கரண்டி
செய்முறை:
1.சிறுபருப்பை சிவக்க எண்ணெய்யில் வறுத்துக் கொள்ளவும். அதனுடன் மீதி உள்ள தேங்காய்துருவல், பூண்டு, மிளகாய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
குறிப்பு:இந்தத் துவையல் பாசிப் பயறு கிச்சடிக்கு சூப்பர் காம்பினேஷன். உடம்பிற்கும் நல்ல குளிர்ச்சியைத் தரும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.