பருப்புத் துவையல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு – 100 கிராம்
2. துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி
3. மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
4. பூண்டு – 2 பற்கள்
5. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், அதில் துவரம் பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி ஆற வைக்கவும்.
2. பருப்பு ஆறியதும், அத்துடன் மிளகாய் வற்றல், பூண்டு, தேங்காய்த் துருவல் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மென்மையாக அரைக்காமல், ரவை போன்று அரைத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.