கோவைக்காய்த் துவையல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோவைக்காய் - 150 கிராம்
2. வெங்காயம் சிறியது - 1 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. புளி - எலுமிச்சையளவு
5. மிளகாய்வற்றல் - 8 எண்ணம்
6. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
7. மல்லி - 3 மேசைக்கரண்டி
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. கோவைக்காயை வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கழுவித் தண்னீர் வடிகட்டவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
3. அதனுடன் கோவைக்காயைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
4. அதில் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போடவும்.
5. நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய், மல்லி சேர்த்து வதக்கவும்.
6. அதபுடன் வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
7. நன்கு வதங்கி ஆறியதும் உப்பு, ஊறவைத்த புளிக்கரைசல்,சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.