புதினா துவையல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. புதினா - 1 கட்டு
2. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
3. உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
4. பெருங்காயம் - 1 துண்டு
5. புளி - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. புதினாவை சிறிதாக நறுக்கித் தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் புதினாவைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
3. மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மூன்றினையும் எண்ணெயில் வறுக்கவும்.
4. வதக்கிய புதினா, வறுத்த மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம், புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.