வல்லாரை துவையல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வல்லாரைக் கீரை - கைப்பிடி அளவு
2. இஞ்சி - சிறு துண்டு
3. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
4. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
5. தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
6. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
7. பூண்டு - 3 பல்
8. எண்ணெய் - 2 தேக்கரண்டி
9. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. இஞ்சியைத் தோல் நீக்கிப் பொடிதாக நறுக்கவும்.
2. பெரிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
3. மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு போன்றவற்றை வாணலியில் போட்டுத் தனித்தனியாக வதக்கி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வல்லாரைக் கீரை, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி வைக்கவும்.
5. வதக்கிய அனைத்தையும் தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து விழுதாக அரைத்துப் பயன்படுத்தவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.