சுண்டைக்காய் வற்றல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சுண்டைக்காய் - 1/2 கிலோ
2. மோர் - 2 லிட்டர்
3. உப்பு - 1 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. சுண்டைக்காயை அலசிக் கத்தியில் சிறிது வெட்டிக் கொள்ளவும்.
2. கொதிக்கும் நீரில் போட்டு மூடி, ஐந்து நிமிடம் கழித்து, நீரை வடித்து வைக்கவும்.
3. மோரில் உப்பை கலந்து சுண்டைக்காயை மோரில் போட்டு ஊற வைக்கவும்.
4. அடுத்த நாள் மோரிலிருந்து காயை கரண்டியால் அரித்தெடுத்து வெயிலில் காய வைக்கவும்.
5. மோரையும் தனியே வெயிலில் வைக்கவும்.
6. மாலையில் திரும்பவும் காயை மோருக்குள் போட்டுக் கலக்கி மூடி வைக்கவும்.
7. மோர் வற்றும் வரை திரும்பத் திரும்ப இதே போல் செய்யவும்.
8. வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும்.
குறிப்பு
இந்த வற்றலைக் கோடைக்காலத்தில் செய்தால் வற்றலை வெயில் காய வைத்திட நன்றாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.