கரம் மசாலாப் பொடி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சோம்பு - 100 கிராம்
2. பட்டை - 10 கிராம்
3. கிராம்பு - 10 கிராம்
4. அன்னாசிப்பூ - 10 கிராம்
5. ஏலக்காய் - 10 கிராம்.
செய்முறை:
1. அனைத்துப் பொருள்களையும் வெயிலில் நன்கு காய வைக்கவும்.
2. நன்றாக ஆறிய பின் மாவு போல் அரைக்கவும்.
3. அரைத்த மாவை ஒரு தாளில் பரப்பி ஆற வைக்கவும்.
4. சூடு ஆறியதும் காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.
குறிப்பு: கரம் மசாலாப் பொடியினைப் பிரியாணி, குருமா போன்றவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.