கருவேப்பிலைப் பொடி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கருவேப்பிலை - 2 கப்
2. உளுந்தம் பருப்பு - 1/4 கப்
3. கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
5. பூண்டு - 1 பல்
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கருவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்து ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும்.
2. பின் அதே கடாயில் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
3. முதலில் வறுத்து வைத்திருக்கும் கருவேப்பிலையைப் பொடியாக அரைக்கவும்.
4. அதனுடன் ஆற வைத்த பருப்பு மிளகாய் வற்றல், உப்பு, பூண்டு சேர்த்து அரைக்கவும்.
குறிப்பு: இட்லி, தோசைக்கு இந்தக் கருவேப்பிலைப் பொடி சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.