கறிவேப்பிலைப் பொடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கறிவேப்பிலை - 4 கப்
2. உளுத்தம் பருப்பு - 1 கப்
3. கடலைப் பருப்பு -1/2 கப்
4. மிளகாய் வற்றல் - 15 எண்ணம்
5. மிளகு - 1 தேக்கரண்டி
6. புளி - 1 எலுமிச்சம் பழ அளவு
7. பெருங்காயம் - 2 தேக்கரண்டி
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. நன்கு முற்றிய கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து ஒரு சுத்தமான துண்டில் போட்டு ஈரம் போகக் காய வைக்கவும்.
2. ஓரிரு நாட்கள் நிழலில் வைத்து அடிக்கடி திருப்பி விட்டால் இலைகளெல்லாம் காய்ந்து விடும்.
3. காய்ந்த இலைகளை ஒரு சட்டியில் வறுத்து சலசல என்று இருக்கும் போது எடுக்கவும்.
4. வறுக்கும் சமயம் கை விடாமல் அடுப்பை சிறியதாக வைத்து வறுக்க வேண்டும்.
5. சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பெருங்காயம், புளி மற்றும் மிளகாயை வறுத்து பின் மிளகு, உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை வறுத்துக் கொள்ளவும்.
6. ஆறிய பின்னர் அனைத்தையும் மிக்சியில் அரைத்து, காற்று புகாத ஜாடியில் வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு:வடித்த சாதத்தில் இந்தப் பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.