மாங்காய் வற்றல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் (சதைப் பற்றுள்ளது) - 10 எண்ணம்
2. மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி
3. பொடி உப்பு - 100 கிராம்.
செய்முறை:
1. மாங்காய்களைக் கழுவி துடைத்து நிழலில் காய விடவும்.
2. அதன் பிறகு மாங்காயைத் துண்டுகள் செய்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் குலுக்கிக் கொள்ளவும்.
3. இரண்டு நாட்கள் அதை அப்படியே ஊற விடவும்.
4. மூன்றாம் நாள் அம்மாங்காயில் சேர்ந்திருக்கும் உப்பு நீரை வடித்து விட்டு, மாங்காயைப் பெரியத் தட்டுகளில் போட்டு வெயிலில் காயவிடவும்.
5. பிறகு, மீண்டும் அதே உப்பு நீரில் போட்டு, நீரை வடித்துக் காயவிடவும்.
6. அதன் பின்னர், ஒரு வாரம் காயவிட்டு, தண்ணீர் முழுவதும் வற்றி மாங்காய் சுக்கு போல் காயவிடவும்.
7. பின்னர் அதை மண் பானை அல்லது எவர் சில்வர் பானையில் போட்டு வைக்கவும்.
குறிப்பு: மாங்காய் வற்றலைத் தேவையான போது, வற்றல் குழம்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.