அகத்தி அல்லது முருங்கைக் கீரை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அகத்தி அல்லது முருங்கைக் கீரை -ஒரு கட்டு (இளம் கீரையாகப் பார்த்து வாங்கவும்)
2. உப்பு - தேவையான அளவு
3. கடுகு உளுந்து - தேவையான அளவு
4. வெங்காயம் - 50 கிராம்
5. மிளகாய் -10 கிராம்
6. கருவேப்பிலை, மல்லித்தழை -தேவையான அளவு
7. தேங்காய் -பாதி
செய்முறை:
1.அகத்தி அல்லது முருங்கைக் கீரையின் இலைகளை மட்டும் பிரித்து அளவான தண்ணீரில் நன்றாக வேக வைக்கவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.
3. பின்பு வெங்காயம் பச்சை மிளகாய், கருவேப்பிலை மல்லித்தழையை அத்துடன் செர்த்து வதக்கவும்.
4. இந்த தாழிசப் பொருட்களை அவித்து வைத்த அகத்திக்கீரை அல்லது முருங்கைக்கீரையில் போட்டு சிறிது வேக வைக்கவும்.
5. துருவிய தேங்காய்ப்பூவைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.