பாசிப்பருப்பு முருங்கைக்கீரைப் பொரியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்கீரை -1 கட்டு
2. பயத்தம்பருப்பு - 1 கப்
3. பெருங்காயம் - சிறிதளவு
4. தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி
தாளிக்க:
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
7. மிளகாய்வற்றல் - 1 எண்ணம்
8. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. முருங்கைக் கீரையை இலைகளாக உருவி மண்ணிருந்தால் நீங்கும்படி அலசி வைக்கவும்.
2. பாசிப்பருப்பை உதிரியாய்ச் சுண்டலுக்கு வேக வைப்பது போல வேக வைத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிசப்பொருட்களைப் போட்டுத் தாளிசம் செய்யவும்.
4. தாளிசத்துடன் முருங்கைக்கீரையைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. தனியே ஒரு வாணலியில் பாசிப்பருப்பை, இலேசாக உப்பு சேர்த்து வதக்கி உதிராக்கவும்.
6. முருங்கைக்கீரை வெந்த பிறகு பாசிப்பருப்புச் சுண்டலை அதனுடன் சேர்த்து வதக்கி தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.