புளிக் கீரை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அரைக்கீரை அல்லது பசலைக்கீரை- ஒரு கட்டு
2. புளி- எலுமிச்சை அளவு
3. வெந்தயம்- 1 தேக்கரண்டி
4. மிளகாய்வற்றல்- 2 எண்ணம்
5. நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
6. கடுகு- 1 தேக்கரண்டி
செய்முறை:
1. புளியை நன்றாகக் கரைத்து வைக்கவும்.
2.கீரையைச் சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் வெந்தயத்தையும் மிளகாய் வற்றலையும் சிவக்க வறுத்துத் தனியே வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் கீரையைப் போட்டு 2 டம்ளர் அளவு கரைத்துள்ள புளிக்கரைசலை விடவும். சிறிது உப்பு சேர்க்கவும்.
5. வறுத்து வைத்துள்ள வெந்தயம், மிளகாய் வற்றலைக் கீரை, புளிக்கலவையுடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
6. கீரை வெந்ததும் சிறிது நேரம் ஆற விட்டு பிறகு அதை அரைத்தெடுக்கவும்.
7. வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
8. அரைத்து வைத்தப் புளிக் கீரையுடன் கடுகு தாளிசத்தைச் சேர்க்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.