முருங்கைக்கீரை பொரியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக் கீரை - 1 கிண்ணம்
2. தேங்காய்த்துருவல் - தேவைக்கு
தாளிக்க:
3. கடுகு - 1/4 தேக்கரண்டி
4. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
6. வெங்காயம் - 1 எண்ணம்
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பொடித்த மிளகாய்வற்றல் சேர்த்துத் தாளிக்கவும்.
2. அத்துடன் கீரையைச் சேர்த்து வேக விடவும். உப்பு சேர்க்கவும்.
3. சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு, நன்கு வெந்தவுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.