பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பொன்னாங்கண்ணிக் கீரை – 1 கட்டு
2. சிறுபருப்பு – 50 கிராம்
3. பூண்டு – 10 பல்
4. வெங்காயம் – 2 எண்ணம்
5. தக்காளி – 1 எண்ணம்
6. மிளகாய் வற்றல் – 5 எண்ணம்
7. கடுகு, உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
8. தேங்காய் – 1/2 கப்
9. சீரகம் – 1/2 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் – சிறிது
11. கருவேப்பிலை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து நன்றாக கழுவித் தனியே எடுத்து வைக்கவும்.
2. சிறு பருப்பை நன்கு கழுவி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
3. மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், மூன்று மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு நைஸாக அரைத்து வைக்கவும்.
4. அடுப்பில் குக்கரை வைத்து, அதில் ஊற வைத்த சிறு பருப்பு, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பூண்டு பற்கள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து மூடி 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
5. அதனுடன் கழுவி வைத்துள்ள பொன்னாங்கண்ணிப் கீரையை பொடி பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
6. கீரை வெந்து கொதித்து வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதுக் கலவையைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விட்டுப் பின்னர் இரண்டு மிளகாய் வற்றல்களைக் கிள்ளிப் போட்டுத் தாளிக்கவும்.
8. தாளிசத்தைக் கீரையுடன் சேர்த்துவிடவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.