முருங்கைக்கீரைப் பொறியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக் கீரை - 1 கட்டு
2. வெங்காயம் -1 எண்ணம்
3. பூண்டு - 7பல்
4. மஞ்சள் தூள் - 1சிட்டிகை
5. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
6. வேர்க்கடலை - 1 கரண்டி
7. எள் - 1 கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. சீரகம் - 1/2 தேக்கரண்டி
11. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
12. நல்லெண்ய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
1. முருங்கைக் கீரையைச் சுத்தம் செய்து, தண்ணீரில் நன்றாக அலசி வைக்கவும்.
2. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.
3. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு பற்கள், மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் சிறிது, சிறிதாக முருங்கைக் கீரையைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.
5. கீரை ஓரளவு வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
6. குறைந்த தீயில், மூடி போட்டு ஏழு நிமிடங்கள் வேக வைத்தால் போதும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை நிறுத்தி விடவும்.
7. கடைசியாக வேர்க்கடலை, எள் ஆகியவற்றை இலேசாக வறுத்து, பொரியலுடன் கலந்து கொள்ளவும்.
குறிப்பு: விரும்பினால், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.