பருப்புக்கீரை கடையல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பருப்புக் கீரை - 1 கட்டு
2. பாசிப்பருப்பு - 1/4 கப்
3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. சின்ன வெங்காயம் - 12 எண்ணம்
6. பூண்டு - 4 பல்
7. தக்காளி - 1 எண்ணம்
8. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. சீரகம் - 1 தேக்கரண்டி
11. எண்ணெய் - 2 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கீரையைச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. பருப்பைக் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
4. அதில் கீரை, நறுக்கிய தக்காளியில் பாதி, நறுக்கிய வெங்காயத்தில் பாதி, பூண்டு, சீரகம் அரைத் தேக்கரண்டி சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, 2 விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.
5. அதைச் சிறிது நேரம ஆறவிட்டு, அதனை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
6. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டுப் பொறிந்ததும், மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளிக்கவும்.
7. வெங்காயம் வதங்கியதும், மீதமிருக்கும் தக்காளியைச் சேர்த்துக் குழைய வதக்கவும்.
8. தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கலக்கி விடவும்.
9. மிளகாய்த் தூள் வாசம் மாறிய பின்பு, அதனுடன் பருப்பு, கீரை சேர்த்துக் கிளறிவிடவும்.
10. அதனுடன் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்கிப் பரிமாறலாம்.
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.