முள்ளங்கிக் கீரைப் பொரியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முள்ளங்கிக் கீரை -1 கட்டு
2. பெரிய வெங்காயம்- 1 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
4. காரட் துருவல் - 1 தேக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
7. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
8. எண்ணெய் -1 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கீரையைச் சுத்தம் செய்து தண்டுப் பகுதியைத் தனியாக சிறு சிறு துண்டுகளாக வெட்டியும், கீரையைப் பொடியாக நறுக்கியும் தனித்தனியாக வைக்கவும்.
2. வாணலியை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டு, அது வெடித்ததும், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றலைச் சேர்த்து, பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
3. வெட்டி வைத்துள்ள தண்டுப் பகுதியைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
4. பின்னர், கீரை, காரட் துண்டுகளைச் சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.
5. அதன் பின்பு, அதில் உப்பு சேர்த்துக் கிளறி மூடி, கீரை வேகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.
6. கீரை வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி விட்டு, தண்ணீர் சுண்டும் வரை தீயை அதிகப்படுத்தி விடாமல் கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.