அரைக்கீரை மசியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அரைக்கீரை - 1 கட்டு
2. மிளகாய் - 4 எண்ணம்
3. பூண்டு - 4 பல்
4. வெங்காயம் - 30 கிராம் (வெட்டி வைக்கவும்)
5. புளி - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
7. சீரகம் - சிறிது
8. கடுகு,உளுந்தம் பருப்பு - தேவையான அளவு
9. கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
1.கீரையுடன் , மிளகாய், பூண்டு, வெங்காயம், புளி சேர்த்து அளவாகத் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
2. நன்கு வெந்தபின்பு அதனுடன் உப்பு, சீரகம் சேர்த்து மத்தினால் கடையவும். (மிக்ஸியில் இலேசாக அரைத்தும் கொள்ளலாம்)
3. பின்பு ஒரு பாத்திரத்தில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிசம் செய்து இறக்கவும்.
குறிப்பு:தண்டுக்கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, பசலைக்கீரை போன்றவைகளையும் இது போல் செய்யலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.