மசாலாக் கீரை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கீரை - 3 கோப்பை
2. துவரம் பருப்பு - 1/4 கோப்பை
3. தக்காளி - 1 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
7. ஊற வைத்த பட்டாணி (பச்சைப் பட்டாணி) - 1 /4 கோப்பை
8. கடுகு - 1 கரண்டி
9. சீரகம் - 1 கரண்டி
10. அரிசி மாவு - 2 கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
12. பெருங்காயம் - சிறிது
செய்முறை:
1. கீரை, பருப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, தக்காளி, பட்டாணி எல்லாவற்றையும் குக்கரில் 4 விசில் வரும் வரை வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகைப் போட்டு, வெடித்தவுடன் சீரகம், பெருங்காயம், சேர்த்துப் பின் கீரைக் கலவையைச் சேர்க்கவும்.
3. உப்பு தேவையான அளவு சேர்த்துக் கிளறவும்.
4. ஐந்து நிமிடம் கழித்து அரிசி மாவைத் தண்ணீரில் கலந்து சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.