புளிக்கீரை
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. முளைக்கீரை அல்லது அரைக்கீரை - ஒரு கட்டு அல்லது வெந்தயக்கீரை - 2 கட்டு (இந்த மூன்றில் ஏதாவது ஒரு கட்டு)
2. துவரம் பருப்பு - 100 கிராம்
3. புளி - எலுமிச்சம்பழம் அளவு
4. சின்ன வெங்காயம் - 100 கிராம்
5. சாம்பார் பொடி - 2 மேசைக் கரண்டி
6. பச்சை மிளகாய் - 7 எண்ணம்
7. அரிசி மாவு - ஒரு சிறிய மேசைக்கரண்டி
8. பெருங்கயத்தூள் - இரண்டு சிட்டிகை
9. மஞ்சள்தூள் - இரண்டு சிட்டிகை
10. நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
1.கடுகு - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலைகள்
வெந்தயம் - ஒரு சிறிய மேசைக் கரண்டி
வரமிளகாய் - 2 எண்ணம்
செய்முறை:
1.முதலில் துவரம் பருப்பை நன்கு வேகவைக்கவும்.
2. முளைக்கீரையையை பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி கீரையை போடவும். அதனுடன் உப்பு,மஞ்சள் போட்டு வேகவைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய்விட்டு சின்ன வெங்காயத்தை வதக்கவும். பின்னர் பச்சை மிளகாயை கீரி சேர்க்கவும்.புளியை கரைத்து அதனுடன் உப்பு,மஞ்சள்தூள், சம்பார்பொடி, போடவும்.
4. பச்சை வாசனை போனவுடன் வெந்த கீரை மற்றும் துவரம் பருப்பை போட்டு ஒரு ஐந்து நிமிஷம் கொதிக்கவிடவும். பின்னர் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து குழம்பில் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.
5. சிறிது எண்ணெய்யில் கடுகு,வெந்தயம்,வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளிக்கீரை தயார்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.