மோர்க்கீரை
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. முளைக்கீரை - இரண்டு கட்டு (இந்தக் கீரையில் மட்டும்தான் செய்ய முடியும்)
2. புளித்த மோர் - அரை லிட்டர்
3. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
4. பச்சை மிளகாய் - 8 எண்ணம்
5. சீரகம் - ஒரு சிறிய மேசைக்கரண்டி
6. தேங்காய் - ஒன்று
7. கடலைமாவு - ஒரு மேசைக்கரண்டி
8. கடுகு - ஒரு சிறிய மேசைக்கரண்டி
9. கறிவேப்பிலை - 10 இலைகள்
10. தேங்காய் எண்ணெய் - ஒரு பெரிய மேசைக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1.முதலில் கீரையை நன்றாக மண் போக அலசிப் பொடியாக நறுக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கீரையைப் போட்டு, அதனுடன் உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைக்கவும்.
3. தேங்காயைத் துருவி, அதனுடன் பச்சை மிளகாய், கடலைமாவு, சீரகம் போட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
4. கீரை வெந்தவுடன், அரைத்த விழுதை சேர்த்து, அதனுடன் மோரை சேர்க்கவும். நன்கு கொதி வந்தவுடன் இறக்கவும். பின்னர் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துப் போடவும். சுவையான மோர்க்கீரை தயார்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.