பொன்னாங்கன்னிக் கீரை கடைசல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பொன்னாங்காணிக் கீரை - 1 கட்டு (200 கிராம்)
2. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
3. நெய் - 2 கரண்டி
4. பாசிப்பருப்பு - 50௦௦ கிராம்
5. கடுகு - உளுந்து - 1 கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு சட்டியில் தண்ணீர் சிறிது ஊற்றி அதில் உப்பு போட்டு, சுத்தம் செய்த பொன்னாங்காணி கீரையைச் சேர்த்து வேக வைக்கவும்.
3. புளியைக் கட்டியாகக் கரைத்து அதில் சேர்க்கவும்.
4. நெய்யில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கடுகு, உளுந்து பருப்பு தாளிதம் செய்யவும்.
5. வேக வைத்த கீரை, பருப்பில் கொட்டி , புளிக்கரைசலைச் சேர்த்து மத்தால் கடைந்து கொள்ளவும்.
6. பின்னர் மீண்டும் அடுப்பில் வைத்து இலேசாகக் கொதிக்க வைத்து கீழே இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.