பருப்பு பாலக் கீரை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பாலக்கீரை - 1 கட்டு
2. துவரம் பருப்பு - 1/4 கப்
3. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
4. சின்ன வெங்காயம் - 3 எண்ணம்
5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. தேங்காய்த்துருவல், சின்ன வெங்காயம், ஜீரகம் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
2. துவரம் பருப்பை அளவான உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
3. அதனுடன் பாலக்கீரையை நறுக்கிப் போட்டு வேக வைக்கவும்.
4. வெந்த பருப்பு கீரையுடன் அரைத்த விழுதைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு: இக்கீரைக்குத் தாளிசம் தேவையில்லை. தாளிசம் சேர்க்க விரும்புபவர்கள் தாளித்துக் கொள்ளலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.