கத்தரிக்காய் பச்சடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய்- 250 கிராம்
2. சிறிய வெங்காயம் - 100 கிராம்
3. மிளகாய் - 15 கிராம்
4. தயிர் - ஒரு கப்
5. தேங்காய் - சிறியது
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு அதன் தோலை உரித்து எடுத்து நன்றாக பிசைந்து வைக்கவும்.
2. பாதியளவு தேங்காயை விழுதாக அரைக்கவும்.
3. கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும் அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்துக் கிளறவும்.
4. அதில் சிறிது தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து கத்தரிக்காய் மசியலுடன் சேர்த்து அடுப்பில் வைத்திருக்கவும்.
5. கடைசியாக தயிர் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.