பீன்ஸ் பொறியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பீன்ஸ் - 1/4 கிலோ.
2. வெங்காயம் - 1 எண்ணம்.
3. காய்ந்த மிளகாய் - 2 எண்ணம்.
4. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
5. கடுகு - 1/4 மேசைக்கரண்டி.
6. உளுத்தம் பருப்பு - 1/4 மேசைக்கரண்டி.
7. தேங்காய் பூ- 1/4 கப்.
8. கருவேப்பிலை - சிறிது.
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பீன்ஸ், வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. வானலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போடவும் பொரிந்ததும் கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ்,உப்பு சேர்த்து வதக்கித் தீயைக் குறைத்து மூடி வேக வைக்கவும்.
4. பீன்ஸ் வெந்ததும் தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.