உருளைக்கிழங்கு பட்டாணி பால் கூட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
2. பச்சைப் பட்டாணி - 1/2 கப்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
5. தக்காளி- 2 எண்ணம்
6. பூண்டு - 5 பல்
7. இஞ்சி - சிறிய துண்டு
8. சோம்பு- 1 தேக்கரண்டி
9. கசகசா- 1/2 தேக்கரண்டி
10. வறுகடலை - 1தேக்கரண்டி
11. தேங்காய்ப்பூ- 2 மேசைக்கரண்டி
12. மல்லித்தழை - சிறிது
13. புதினா - சிறிது
14. எலுமிச்சை- 1 எண்ணம்
15. எண்ணெய் - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
17. பட்டை - சிறு துண்டு
18. கிராம்பு - 3 எண்ணம்
19. ஏலக்காய் - 2 எண்ணம்
20. பிரிஞ்சி இலை - சிறிது.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துச் சிறுதுண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. தேங்காய்ப்பூ, இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா, வறுகடலை, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் நீர் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், மல்லி, புதினா சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. அதனுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து அப்பாத்திரத்தை மூடி போட்டு வேகவிடவும்.
6. பச்சைப் பட்டாணி வெந்ததும், குழம்பு போல் தளர்ச்சியாக இருக்கும். இந்தக் கலவையில் உருளைக் கிழங்குத் துண்டுகளைச் சேர்த்துக் கிளறிக் கொதிக்க விடவும்.
7. எல்லாம் ஒன்றாகத் திரண்டதும், இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்து, மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.