பாலக்கீரைக் கூட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாலக்கீரை - 1 கட்டு
2. துவரம்பருப்பு- 1/4 கப்
3. தேங்காய்ப்பூ- 1 மேசைக்கரண்டி
4. பூண்டு - 4 பற்கள்
5. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
6. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
7. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு
11. கடுகு - 1/4 தேக்கரண்டி
12. உளுந்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி.
செய்முறை:
1. துவரம் பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்து வைக்கவும்.
2. சீரகத்தூள், தேங்காய்ப்பூ சேர்த்து அரைத்துப் பாலாக எடுத்து வைக்கவும்.
3. பாலக்கீரையை நறுக்கி தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
4. கீரையுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கி அதை மத்தினால் மசித்துக் கொள்ளவும்.
5. மசித்த கீரையுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து எடுத்த தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
7. வேகவைத்த கீரையுடம் தாளிசத்தைச் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.