பாகற்காய் பொறியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாகற்காய் - 1/2 கிலோ.
2. வெங்காயம் - 3 எண்ணம்.
3. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி.
4. அரிசி - 50 கிராம்.
5. மிளகாய் வத்தல் - 4 எண்ணம்.
6. சோம்பு - 2 தேக்கரண்டி.
7. கடுகு - 1 தேக்கரண்டி.
8. உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி.
9. கறிவேப்பிலை - சிறிது.
10. எண்ணெய் - 2 தேக்கரண்டி.
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பாகற்காய் மற்றும் வெங்காயத்தைச் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. நறுக்கிய பாகற்காயில் மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும்.
3. அரிசி, மிளகாய் வற்றல், சோம்புவை வாணலியில் மிதமான தீயில் பொரியும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்துப் பொடித்துக் கொள்ளவும்.
4. வாணலியில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
5. தாளித்ததில் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. ஓரளவு வதங்கியதும் பாகற்காயைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, உப்பு சேர்க்கவும்.
7. நன்கு உதிரியாகப் பொலபொலவென்று ஆனதும் பொடியில் இரண்டு மேசைக்கரண்டி சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும்.
குறிப்பு:
தேங்காய் சேர்க்காத இந்தப் பாகற்காய் பொறியல் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.