பச்சைப்பயறு பச்சடி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சைப்பயறு- 1 கப்
2. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
5. எலுமிச்சம் பழச்சாறு - சிறிது
6. மல்லித்தழை - சிறிது
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சைபயறைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
2. மறுநாள் காலையில், தண்ணீரை வடிகட்டி விட்டு, பச்சைப்பயறை ஒரு துணியில் கொட்டி கட்டி வைத்து விடவும்.
3. அதற்கு அடுத்த நாள் காலையில், பச்சைப் பயறு முளைகட்டி இருக்கும்.
4. முளைகட்டிய பயறுடன் தேங்காய்த் துருவல், மல்லித்தழை சேர்க்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டுத் தாளித்து பயிறுடன் சேர்க்கவும்.
6. உப்பு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்கு கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.