அவரைக்காய் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. அவரைக்காய் - 2 கப்
2. தேங்காய்த்துருவல் - 1 தேக்கரண்டி
3. உப்பு - தேவையான அளவு
4. மஞ்சள் தூள் - சிறிதளவு
தாளிக்க:
5. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
8. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
9. மிளகாய்வற்றல் - 2 எண்ணம்
10. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. அவரைக்காயை நன்றாகச் சுத்தம் செய்து, அதன் நுனியைப் பிரித்து நாரைப் பிரித்துச் சிறிதாக நறுக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிசப்பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் பொடியாக நறுக்கின அவரைக்காயைச் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும். இடையிடையே அடிக்கடி கிளறி விடவும்.
4. அவரைக்காய் வெந்த பிறகு துருவிய தேங்காய்த்துருவலைச் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.