கத்தரிக்காய் வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 8 எண்ணம்
2. தேங்காய்த் துருவல் - 1/4 கப்
3. பூண்டு - 2 பல்
4. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
5. சீரகம் - 1 மேசைக்கரண்டி
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
8. பெருங்காயத் தூள் - சிறிது
9. எண்ணெய் - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
11. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. கத்தரிக்காயின் காம்பை நீக்கிவிட்டு, நீளவாக்கில் நான்கு துண்டுகளாக வெட்டவும்.
2. சீரகம், தேங்காய்த் துருவல், பூண்டு, மிளகாய் வற்றல் போன்றவற்றை ஒரு மிக்ஸ்யில் போட்டு அரைத்தெடுக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
5. காய் ஓரளவு வதங்கியதும், அதில் அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்க்கவும்.
6. அத்துடன் பெருங்காயத்தூள் சிறிது தூவவும்.
7. கடைசியாகத் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதில் சிறிது நீர் விட்டு மிதமான நெருப்பில் கொதிக்கவிடவும்.
8. நீர் சுண்டியதும் இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.