உருளைக்கிழங்கு வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு (சிறியது) - 8 எண்ணம்
2. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
6. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
7. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
8. கரம் மசாலா - 1 1/4 தேக்கரண்டி
9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்துக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், உருளைக்கிழங்கைப் போட்டு, ஐந்து நிமிடம் வரை குறைவான நெருப்பில் வைத்து பொன்னிறமாகப் பொரித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
3. வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக விழுது போல் அரைத்து வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில், கருவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
5. பின் அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
6. அடுத்து பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கி, அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து மீண்டும் கிளறி விடவும்.
7. பிறகு அதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறவும்.
8. அனைத்து மசாலாக்களும் உருளைக்கிழங்கில் ஒன்றாகச் சேரும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.