மணத்தக்காளி வற்றல் பச்சடி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மணத்தக்காளி வற்றல் – 1/4 கப்
2. கெட்டித்தயிர். – 2 கப்
3. மிளகாய்வற்றல் – 1 எண்ணம்
4. துவரம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
5. சீரகம் – 1/4 தேக்கரண்டி
6. நெய் – 2 தேக்கரண்டி
7. பெருங்காயம் – 1 சிட்டிகை
8. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. கடாயில் நெய்விட்டு மணத்தக்காளி வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
2. மிளகாய் வற்றல், சீரகம், துவரம் பருப்பு ஆகியவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
3. இறுதியில் அனைத்தையும் தயிரில் கலந்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து உப்பு சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.