பீர்க்கங்காய் கூட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 100 கிராம்
2. பீர்க்கங்காய் - 250 கிராம்
3. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. கருவேப்பிலை - சிறிது
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. துவரம் பருப்பை 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
2. பீர்க்கங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
3. பச்சை மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
4. வேகவைத்த காயுடன் பருப்பு, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
6. இறக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய் கூட்டுடன் தாளிசத்தைச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.