உருளை வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 3 எண்ணம்
2. இஞ்சி - சிறு துண்டு
3. பூண்டு - 4 பல்
4. சோம்பு - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைவட்ட துண்டுகளாக சிறிது தடிமனாக வெட்டி கொள்ளவும்.
2. உருளை, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.
3. அரைத்த கலவையில் உருளையைப் பிரட்டி 1/2 மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்.
4. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் உருளைக்கிழங்குக் கலவையைப் பரவலாகப் போட்டு வேகவிடவும்.
5. ஒருபுறம் வெந்ததும் மறுபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.