தயிர் பச்சடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தயிர் - 1 கப்
2. வெள்ளரிக்காய் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. கேரட் - 2 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. கேரட்டைத் துருவி வைக்கவும்.
3. பொடியாக நறுக்கிய காய்கள், கேரட் துருவல் ஆகியவற்றுடன் இஞ்சி விழுது, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
4. பிறகு அதனுடன், தயிர் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கவும்.
குறிப்பு: வத்தல் குழம்பு சாதம், காய்கறிச் சாதம் ஆகியவைகளுக்குத் தொட்டுக்கொள்ள இது மிகச்சிறந்த துணை உணவு.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.