உருளைக்கிழங்கு மசாலாப் பொரியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 250 கிராம்
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
6. எண்ணெய் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்து உதிர்த்து வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறத்தில் வதக்கவும்.
3. அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறியதும் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.