முருங்கைப் பூ பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைப் பூ - 1 கப்
2. கடலைப்பருப்பு - 1/2 மேசைக்கரண்டி
3. உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
4. கருவேப்பில்லை - 1 கொத்து
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. சின்ன வெங்காயம் - 8 எண்ணம்
7. முருங்கைக் கீரை - சிறிதளவு
8. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
9. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முருங்கைப் பூ கொத்தை நீரில் அலசி தனித்தனியாக பூவை மட்டும் கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்துப் பொரிந்ததும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
4. பின் அதனுடன் வெங்காயம், கருவேப்பில்லை, மிளகாய் வற்றல் சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், முருங்கைப் பூவுடன் சிறிது முருங்கைக் கீரையும் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
6. தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.