வெண்டைக்காய் மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் - 1/4 கிலோ
2. வெங்காயம் -1 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. தயிர் - 1 மேசைக்கரண்டி
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
8. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
9. கடுகு - 1 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வெண்டைக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும்
2. தக்காளியை மிக்ஸியில் போட்டுக் கூழாக்கவும்
3. ஒரு கடாயில் எண்ணெய்யைக் காயவைத்து வெண்டைக்காயைக் கொட்டி நன்கு வதக்கித் தனியே வைக்கவும்
4. பின்பு அதே எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கவும்
5. அத்துடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்
6. அதில் அரைத்து வைத்த தக்காளியைச் சேர்த்து, அதனுடன் உப்பைச் சேர்த்துக் கிளறி வதக்கவும்
7. அதனுடன் தயிர் மற்றும் பொடிகளைப் போட்டு பச்சை வாசனை நீங்கியதும் வதக்கி வைத்த வெண்டைக்காயைப் போட்டுக் கிளறி இறக்கவும்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.