நூல்கோல் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நூல்கோல் (துருவியது) - 1 கப்
2. காரட் (துருவியது) - 1 தேக்கரண்டி
3. வெங்காயம் (நறுக்கியது) - 3 தேக்கரண்டி
4. மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
5. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 1 எண்ணம் (சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்)
9. எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளிக்கவும்.
2. மல்லித்தழை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் சிறிது நிறம் மாறியதுமே நூல்கோல் துருவல், காரட் துருவல், உப்பு சேர்த்துச் சிறிது நேரம் மூடி வேக வைக்கவும்.
4. வெந்தவுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துச் சிறிது நேரம் கிளறவும்.
5. அதனை இறக்கி வைத்து மல்லித் தழையினை மேலாகத் தூவவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.