பெப்பர் காளான்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 250 கிராம்
2. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
4. மஞ்சள் தூள் - சிறிது
5. மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு
7. கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி
8. கருவேப்பிலை - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. காளான், வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
3. தாளிசத்துடன் வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
4. பின்னர் அதனுடன் நறுக்கிய காளானைச் சேர்த்து வதக்கவும்.
5. காளான் சிறிது வெந்தவுடன் தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி மூடி விடவும்.
6. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை காளானை நன்கு கிளறி விடவும்.
7. பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் தண்ணீர் முற்றிலும் வற்றி விடும். இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.